மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதை நீட் தேர்வு வழக்குகள் உணர்த்துகின்றன: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

புதுடெல்லி: மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை என்பதனை நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் உணர்த்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதிரடியாக கருத்து தெரிவித்து பேசியுள்ளார். டெல்லியில் நடந்த ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிக்கான மருந்து, சுகாதாரத்தில் நியாயம் மற்றும் சமத்துவத்திற்கான தேடுதல் என்ற தலைமையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நீட் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் எனது அமர்விலேயே நிலுவையில் இருந்து வருகிறது. இருப்பினும் நீதிமன்றங்கள் அரசின் கொள்கைக் களத்தில் நுழைய முடியாது. இதில் முக்கியமாக இதுபோன்ற நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நம்பிக்கையையும், கருத்துகளையும் கேட்பது அரசின் கடமையாகும். இருப்பினும்

அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் தலையிடுவது நீதிமன்றத்தின் கடமையாக இருக்கிறது. இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களின் அவசியத்தின் அடையாளமாகவும் இந்த நீட் வழக்குகள் உள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த வழக்குகள் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றன. நீதியின் கோட்பாடுகளின் சட்டம் மற்றும் மருத்துவம்  இந்த இரு துறைகளும் நியாயம், சமத்துவம், சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவை ஆகும். இவ்வாறு அவர்  பேசினார்.

Related Stories: