முதல்வர் பற்றி அவதூறு குஜராத்தில் பதுங்கிய தொழிலதிபர் கைது

திருவிடைமருதூர்: தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜான்ரவி (40). படகுகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தூத்துக்குடி மற்றும் சென்னையில் நடத்தி வரும் இவர், பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வாராம். கடந்த 21ம் தேதி ஜான்ரவி, அவரது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். இது குறித்து புகா்ரின்பேரில், தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் குஜராத் சென்று பதுங்கி இருந்த ஜான்ரவியை நேற்று முன்தினம் கைது செய்து அழைத்து வந்து திருவிடைமருதூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி, திருச்சி சிறையில் அடைத்தனர்.

Related Stories: