×

போபண்ணா ஜீவன், ராம் முன்னேற்றம்: ஏடிபி டென்னிஸ் தரவரிசை

சென்னை: கத்தார் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா  இரட்டையர் பிரிவு தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் கத்தார் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நடந்தது. அதன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் ேபாபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை சாம்பியன் பட்டம் வென்றது. அதன் மூலம் போபண்ணா  160 புள்ளிகளையம், மேத்யூ 250புள்ளிகளையும் பெற்றனர். அதனால் நேற்று வெளியிடப்பட்ட ஏடிபி இரட்டையர் பிரிவு தர வரிசையில் போபண்ணா முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 17வது இடத்தில் இருந்து  2 இடங்கள் முன் 15வது  இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் 2013ம் ஆண்டு 3வது இடத்தை பிடித்ததே போபண்ணா தரவரிசையில் கண்ட அதிக பட்ச முன்ேனற்றம். போண்ணாவுடன் இணை சேர்ந்து விளையாடிய மேத்யூ எப்டன்   ஒரு இடம் முன்னேறி 36வது இடத்தில் உள்ளார்.

* ஜீவன், ராம் ஏறுமுகம்: பிரான்சின் மார்சேயில் ‘ஓபன் 13 புரவினன்ஸ்’ ஏடிபி டூர் டென்னிஸ் போட்டி நடந்தது. அதில் தமிழக வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ராம் பாலாஜி இணை ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி வரை முன்னேறியது. அதனால் இரட்டையர் பிரிவு தரவரிசையில் ஜீவன் 9 இடங்கள் முன்னேறி 82வது இடத்திற்கும், ராம் 7 இடங்கள் முன்னேறி 92வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.



Tags : Bopanna Jeevan ,Ram ,ATP , Bopanna Jeevan, Ram Progress: ATP Tennis Rankings
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்