தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவராக வெங்கடேசன் நியமனம்

சென்னை: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் இருந்து வருகிறார். இவர் இந்த பதவியில், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக இரண்டாவது முறையாக வெங்கடசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெங்கடசேன் பாஜ தேசியப் பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர். மேலும் பாஜ எஸ்.சி. அணி மாநிலத் தலைவராக இருந்தார்.

Related Stories: