மத்திய கூட்டுறவு வங்கிகளில் லோன் மேளா: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், மூலமாக பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக டாப்செட்கோ 2022-2023 நிதி ஆண்டில் ரூ.300 லட்சம் மற்றும் டாம்கோ 2022-2023 நிதி ஆண்டிற்கு ரூ.185 லட்சம் கடனுதவி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெறவுள்ளது.

அதன்படி மார்ச் 1 ந் தேதி மாதவரத்திலும், 2 ந் தேதி மீஞ்சூரிலும், 3 ந் தேதி மொகப்பேரிலும், 7 ந் தேதி பள்ளிப்பட்டிலும், 8 ந் தேதி பட்டாபிராமிலும், 9 ந் தேதி பொன்னேரியிலும், 10 ந் தேதி பூந்தமல்லியிலும், போரூரில் 14 ந் தேதியும் நடைபெற்றது. அதேபோல் செங்குன்றத்தில் 15 ந் தேதியும், திருத்தணியில் 16 ந் தேதியும், திருவாலங்காட்டில் 17 ந் தேதியும், திருவள்ளூரில் 21 ந் தேதியும், திருவோற்றியூரில் 22 ந் தேதியும், ஊத்துக்கோட்டையில் 23 ந் தேதியும், வளசரவாக்கத்தில் 24 ந் தேதியும், வரதராஜபுரத்தில் 28 ந் தேதியும், மணலியில் 29 ந் தேதியும் நடைபெற உள்ளது. எனவே மக்கள் இம்முகாம்களில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: