இலவச வீட்டுமனை கேட்டு ஆதிதிராவிடர் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் வட்டம், திருவானைக்கோவில் கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: திருவானைக்கோவில் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் 100க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாளடைவில் குடும்பங்கள் பெருக்கும் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதனால், நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் கிராமத்திலே காலி மனை உள்ளது. அதனை சிலர் தங்கள் சுயலாபத்திற்காக வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், அதே கிராமத்தை சேர்ந்த நாங்கள் 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனவே, அதே இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுத்து உடனடியாக பட்டா வழக்கு வேண்டும்.

Related Stories: