திருக்கழுக்குன்றம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம்: போக்சோ வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த அமிஞ்சிக்கரை கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று முன்தினம் அப்பகுதியில் குப்பை எரிந்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது, அந்த குப்பையிலிருந்த தீ அந்த இளம் பெண் அணிந்திருந்த உடையில் பட்டு உடை தீப்பற்றி எரிந்ததில் தீக்காயம் ஏற்பட்டு அந்தப் பெண் அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியின் மீது ஏற்பட்ட தீயை அணைத்து, சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிசிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அந்த இளம் சிறுமி தீக்காய பிரிவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தீக்காயம் சம்மந்தமாக அந்த இளம் பெண்ணுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளில் அந்த இளம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சிறுமி சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதாலும், தற்போது தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாலும் அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை, என்ற நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: