3ம் தேதி தேரோட்டம் வேதை வேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திர விமானத்தில் சந்திரசேகரர் வீதியுலா

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 14ம் நாள் விழாவான நேற்றிரவு சந்திரசேகர சுவாமி இந்திர விமானத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 3ம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை ஏடிஎஸ்பி சுகுமாறன் தலைமையில் வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் தேர் செல்லும் நான்கு வீதிகளிலும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர் சீர் செய்யும் பணியையும் பார்வையிட்டனர். பின்னர் கோயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: