×

இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணி அதிகாரிகளுக்கு சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக காவல் அணி அதிகாரிகளுக்கு சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி 2022-23 கடந்த 13.02.2023 முதல் 17.02.2023 வரை, மத்தியபிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், 1.அறிவியல் சார்ந்த புலனாய்வு, 2.கணினி விழிப்புணர்வு, 3.புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு, 4.நாசவேலை தடுப்பு சோதனை, 5.மோப்பநாய்களின் திறமை ஆகிய  பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

பல மாநிலங்களின் காவல்துறை குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தமிழக காவல்துறை அணி, 8 தங்க பதக்கங்கள், 1 வெள்ளி பதக்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் பெற்றதுடன், அறிவியல் சார்ந்த புலனாய்வு பிரிவில் முதல் பரிசுக்கான கேடயமும், புகைப்பட பிரிவில் முதல் பரிசுக்கான கேடயமும், நாசவேலை தடுப்பு சோதனை பிரிவில் 2ம் பரிசுக்கான கேடயமும் பெற்றது. ஆக மொத்தம் 11 பதக்கங்கள் மற்றும் 3 கேடயங்கள் பெற்று புள்ளிகள் அடிப்படையில், தமிழக காவல்துறை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான சார்மினார் கோப்பையை பெற்றது.

இதில் தமிழக காவல்துறை அணியில் கலந்து கொண்ட 1.M.ஆனந்த பெருமாள் (மு.நி.கா.44224), முதல்நிலைக் காவலர். மத்திய குற்றப்பிரிவு என்பவர் ஆகிய 2 பிரிவுகளிலும் 2 தங்கப் பதக்கங்களும், 2.V.விமல்குமார், உதவி ஆய்வாளர், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் என்பவர் அறிவியல் சார்ந்த புலனாய்வு  பிரிவின் புகைப்படம் பிரிவில், 1 தங்கப்பதக்கமும், 3.C.முத்தேலு, பெண் காவல் ஆய்வாளர், நவீன கட்டுப்பாட்டறை என்பவர் நாசவேலை தடுப்பு சோதனை பிரிவில் வெள்ளி பதக்கமும், 4. S.ஐயப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர்,

மத்திய குற்றப்பிரிவு என்பவர் நாசவேலை தடுப்பு சோதனை பிரிவின் வாகனங்கள் தேடுதல் பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று, சென்னை பெருநகர காவல் சார்பாக 3 தங்க பதக்கங்கள்,  1 வெள்ளி பதக்கம் மற்றும் 1 வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், 66வது அனைத்து இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில் தமிழக காவல் அணியில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெற்ற சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து வரும் காவல் ஆய்வாளர் முத்தேலு, உதவி ஆய்வாளர் விமல்குமார்,

சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் முதல்நிலைக் காவலர் ஆனந்த பெருமாள் ஆகியோரை இன்று (27.02.2023) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். பின்னர் காவல் ஆணையாளர் பதக்கங்கள் பெற்ற காவல் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags : Shankar Jiwal ,Tamil Nadu Police Team ,Indian Police Workmanship , Shankar Jiwal praised the officers of the Tamil Nadu Police Team who won the title of champion in the Indian Police Performance Competition
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...