வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 4 நாட்களுக்கு இயங்காது: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், கோட்டம்-94க்குட்பட்ட வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், 28.02.2023 முதல் 03.03.2023 வரை 4 நாட்களுக்கு வில்லிவாக்கம் மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் 28.02.2023 முதல் 03.03.2023 வரையிலான நாட்களுக்கு உடல்களை எரியூட்டுவதற்கு பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: