இறால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

சென்னை: இறால் உற்பத்தியில் உலக நாடுகளிலேயே முதல் இடத்தில் இருப்பது இந்தியா தான் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் மற்றும் ஒன்றிய உவர் நீர் நிறுவன வளாகத்தில்   மீன்வளர்ப்பு காப்பீட்டுத் தயாரிப்பு, வெள்ளை இறாலின் மரபணு மேம்பாட்டுத் திட்டம், மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புர்ஷோதம் ரூபாலா கலந்து கொண்டு இந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதில், ஒன்றிய  இணை அமைச்சர் எல்.முருகன், ஒன்றிய மீன்வளத்துறை செயலாளர்  ஜித்தேந்திரா நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், இறால் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஒன்றிய இணை  அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: இந்த துறையில், தொழில்நுட்பம் மூலமாக மேலும் அதிகப்படுத்தும் விதமாக இன்று 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. மீன்வளத் துறையில், இந்தியா இந்த 9 ஆண்டுகளில் மிக பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2014க்கு முன்னர் இந்த துறையின் முதலீடு ரூ.8000 கோடியாக இருந்தது. தற்போது 40 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இறால் உற்பத்தியில் உலக நாடுகளிலேயே முதல் இடத்தில் இருப்பது நமது இந்திய நாடு தான். இந்த துறைக்கு ஒரு அமைச்சரை கொடுத்து உலக அளவில் சிறப்பாக இந்த துறை செயல்படுகிறது.

 2014ம் ஆண்டு வரை ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த இந்த துறையின் முதலீடு 9 ஆண்டுகளில் ரூ.32,000 கோடியாக இருப்பதற்கு பிரதமரின் திட்டங்கள் தான் காரணம். இந்தியாவில் விசாகப்பட்டினம், தூத்துக்குடி மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள துறை முகங்களை சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான திட்டத்தை போட்டு அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இந்தியாவிலேயே கடல் பாசி வளர்ப்புக்கு முக்கியத்துவம் ெகாடுக்கப்பட்டு, தமிழகத்தில் கடல் பாசிக்கு ஒரு பூங்காவை அமைத்து, கடல் பாசி வளர்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. மீன் வள துறையில் இதுவரை ரூ.3000கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: