×

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் ‘லீக்’ ஆனது: மீண்டும் அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் லீக் ஆனதாக மீண்டும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், 2020, 2021ம் ஆண்டுகளில் உலக மக்களை பாடாய் படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் பீதி அடங்கியுள்ள நிலையில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக பலநாடுகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கோவிட்-19 வைரஸ் கசிந்தது. கொரோனா வைரசின் தோற்றம் குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படுகிறது’ என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்தாண்டு ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் உட்பட பல ஏஜென்சிகளும், சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதை ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : US , Corona Virus 'Leaked' From Chinese Lab: Again America Announces
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!