போதை பொருள் வழக்கில் ‘ராப்’ பாடகருக்கு கைது வாரண்ட்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

புளோரிடா: போதைப்பொருள் வழக்கில் ஜாமீனில் இருக்கும் கோடக் பிளாக், மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாததால் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ராப்’ பாடகர் கோடக் பிளாக் என்பவர், புளோரிடா நெடுஞ்சாலை காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தை கடந்த ஜூலை மாதம் போலீசார் சோதனையிட்ட போது, அதில் 31 ‘ஆக்ஸிகோடோன்’ மாத்திரைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதையடுத்து அவருக்கு எதிராக போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் புளோரிடா மாகாணத்திற்கு உட்பட ப்ரோவர்ட் கவுண்டி சர்க்யூட் நீதிமன்றத்தால் முன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருந்தும் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. பலமுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ப்ரோவர்ட் கவுண்டி சர்க்யூட் நீதிமன்றம் கோடக் பிளாக் எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

Related Stories: