சென்னை: குரூப்-2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியதால் பல்வேறு குளறுபடிகளுடன் தாமதமாக தேர்வு நடந்தன. தேர்வு தாமதம் காரணமாக பல முறைகேடு நடந்ததால் தகுதி வாய்ந்த தேர்வர்கள் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
