×

மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு தேக்கமடையாமல் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்-திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

Thiruvarur: In Thiruvarur district, the Government direct purchase of paddy will be done immediately without stagnation of rice bundles.வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டூர் அணையானது வரலாற்றிலேயே இல்லாத வகையில் முன்கூட்டியே கடந்தாண்டு மே மாதம் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டதால், அடுத்த ஒருசில நாட்களிலேயே கடைமடை தண்ணீர் சென்று டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் உடனடியாக துவங்கினர். அதன்படி, திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.13.57 லட்சம் ஒதுக்கி 100 சதவிகித மானியத்தில் ரசாயன உரங்கள், கூட்டுறவு துறையின் மூலம் விவசாய கடன்களும் வழங்கப்பட்டதால் நடப்பாண்டில் சாகுபடி வழக்கமான பரப்பளவை விட கூடுதாலாக 57 ஆயிரம் ஏக்கரில் என மொதத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் செப்டம்பர் 1ம் தேதியே கொள்முதல் பருவம் துவங்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் 4 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் நெல்லுக்கான ஆதார விலையாக மத்திய அரசு விலையுடன் பொது ரகத்திற்கு ரூ 75ம், சன்ன ரகத்திற்கு ரூ 100ம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பொது ரகம் ரூ.2 ஆயிரத்து 115க்கும், சன்ன ரகம் ரூ 2 ஆயிரத்து 160க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

அடுத்ததாக சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடியினை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர். இதற்கு தேவையான உரங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டதுடன் தேவையான ரசாயண உரங்கள் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் போன்றவையும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் உரிய காலத்தில் கிடைக்க செய்ததன் காரணமாக இந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கம் போல் இந்த நெல்களை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யும் நிலையில் மாவட்டத்தில் இதுவரையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர் மற்றும் நன்னிலம் என 8 தாலுக்காவிலும் மொத்தம் 522 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 மூட்டைகள் வரையில் கொள்முதல் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் (25ம் தேதி) வரை மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 20 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மாத்தின் துவக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் தற்போது முழு வீச்சில் அறுவடையானது நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் தினந்தோறும் கூடுதலான அளவில் நெல் மூட்டைகளை கொண்டு வரும் நிலையில் அவ்வாறு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் சில கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்து வருவதால் கொள்முதல் செய்யும் வரையில் விவசாயிகள் அந்த நெல்லை தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் வரையில் பாதுகாக்கும் நிலை இருந்து வருகிறது.

மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில்ஸ விவசாயிகளின் நெல்லை தேக்கமடையாமல் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரையில் விரைந்து கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruvarur , Thiruvarur: In Thiruvarur district, the Government direct purchase of paddy will be done immediately without stagnation of rice bundles.
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...