×

ஆரம்ப கட்டத்திலேயே மோசடி நிறுவனங்களை கண்டறிய வேண்டும்: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையில் இறங்க வலியுறுத்தல்

சென்னை: அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதிநிறுவனங்களில் முதலீடு செய்யும் மக்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், இதுபோன்ற மோசடிகளை ஆரம்பத்திலேயே தடுக்கவும் சட்டத்தில் உள்ள வழிவகைகள் உள்ளன. முதலீடு செய்யும் பணத்திற்கு சுமார் 105 முதல் 25% வரை வட்டி வழங்கப்படும் போன்ற ஆசையை தூண்டும் அறிவிப்புகளில் தனியார் நிதி நிறுவனங்களில் லட்ச கணக்கில் முதலீடு செய்து ஏமாந்தவர்களின் சோகக்கதைகள் ஏராளம். தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிதிநிறுவனங்களின் மோசடி என்பது ஓயாத நிகழ்வுகளாகிவிட்டன.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரெடிக், எல்.என்.எஸ். இன்டெர் நேஷனல், வேலூர் ஐ.எப்.எஸ். மற்றும் ஹிஜாவ் அஸோஸியேட் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் கண்ணீர் வடித்து கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கோடிகளை சுருடியவர்கள் கைது, சொத்துக்கள் பறிமுதல் என தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்தாலும் ஏமாந்தவர்களின் ஏக்கங்கள் தீர சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

ஏமாந்த பொதுமக்களை திரும்ப திரும்ப குறை கூறுவதை தவிர்த்துவிட்டு ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் வங்கி அதிகாரிகள். இதுபோன்ற மோசடி நிதி நிறுவனங்களை முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய பொறுப்பும் ரிசர்வ் வங்கிக்கு உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதும் மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.


Tags : Reserve Bank , fraud, company, , reserve, bank, action, action, insistence
× RELATED இந்தியாவின் அந்நியச் செலாவணி...