×

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம்

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.நடிகை குஷ்பு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் தற்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் என்று குஷ்பூ கூறியுள்ளார்.

உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். திமுக நிர்வாகி ஒருவர் பாஜகவில் உள்ள பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசியிருந்தார். அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அந்த நபர் தேசிய மகளிர் ஆணையத்திலேயே மன்னிப்பு கேட்டார். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார். குஷ்புவுக்கு தமிழக பாஜக அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

*குஷ்புவுக்கு அண்ணாமலை வாழ்த்து

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.Tags : Khushbu ,National Commission for Women , Actress Khushbu appointed as member of National Commission for Women
× RELATED வேலை கேட்டு வந்த பெண்ணிடம் அமைச்சர்...