இலங்கையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி போராட்டம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீசார்..!!

கொழும்பு: இலங்கையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் எதிர்கட்சியினரை போலீசார் விரட்டி அடித்ததால் பதற்றம் நிலவியது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கவும், தேர்தல் செலவீனங்களுக்கும் நிதி ஒதுக்க நிதி அமைச்சகம் மறுத்ததால் தேர்தல் நடப்பது கேள்விகுறியாகியுள்ளது. இதனை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தலைநகர் கொழும்பில் ஆயிரக்கணக்கில் திரண்ட தேசிய மக்கள் கட்சியினர், ரணில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி பேரணி சென்றவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை விரட்டியடிக்க முயன்றதால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

Related Stories: