×

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் உள்ள நிலையில் காலை 11 மணி வரை 27.89 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு: திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் 2023 ஜனவரி 4ம் தேதி காலமானார். அவரின் மறைவு தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்க்ளில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான 32 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 5 வாக்கு இயந்திரம், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பெட் பயன்படுத்தப்பட உள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் தொடங்கிய நிலையில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதில் 12,679 ஆண் வாக்காளர்களும், 10,294 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 11 மணி வரை 27.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 32,562 ஆண்களும், 30,907 பெண்களும் மொத்தம் 63,469 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். காலை 7 மணி முதல் 11 மணி வரை வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளனர்.  



Tags : Erode East , With 2.27 lakh voters in Erode East constituency, the voter turnout was 27.89 percent till 11 am.
× RELATED முதல்வர் கூறியது சரிதான் அமைச்சர்கள்...