×

சங்கராபுரத்தில் பசுமை, தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு: சிலம்பம் சுற்றியபடியே பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பசுமை மற்றும் தூய்மை குறித்து நடைபெற்ற தூய்மை பணியில் பள்ளி மாணவ, மாணவியர் சிலம்பம் சுற்றியபடியே பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாநில அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

முன்னதாக பசுமை மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர் மற்றும் மாணவியர் பங்கேற்று விதவிதமாக சிலம்பம், கராத்தே ,பொய்க்கால் குதிரை என அசத்தினர். சங்கராபுரம் பேருந்துநிலைய வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது. இதில் 300கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


Tags : Sankarapura ,Shilambam , Shankarapuram, green-cleanliness, awareness rally, students participating
× RELATED சங்கராபுரம் உணவகங்களில் அதிகாரிகள்...