இத்தாலி அருகே நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து: 7 குழந்தைகள் உட்பட 59 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

கலாபிரியா: இத்தாலி அருகே புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற கப்பல் கவிழ்ந்த விபத்தில் சில மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தை உட்பட 59 பேர் உயிரிழந்தனர். வறுமை உள்ளிட்ட காரணங்களால் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் இத்தாலிக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக இடம்பெயர்கின்றனர். அந்த வகையில் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சிறிய ரக கப்பலில் இத்தாலிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இத்தாலியின் கலாபிரியா பகுதி அருகே கடல் சீற்றத்தால் தொழிலாளர்கள் சென்ற கப்பல் பாறை மீது மோதி கவிழ்ந்தது.

இதுகுறித்து கலாபிரியா கவர்னர் ராபர்டோ கியூடோ தெரிவித்ததாவது; கலாபிரியா மாகாணத்திற்கு இது ஒரு துக்கமான நாளாகும். பொதுவான அலட்சியத்தால் இதுபோன்ற விபத்து நிகழ்கிறது. கலாபிரியா எப்போதும் தொழிலாளர்களை வரவேற்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 18,000 புலம்பெயர் தொழிலாளர்களை வரவேற்றுள்ளோம். ஐரோப்பா எங்களை ஒருபோதும் கைவிடாது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் தடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் சடலங்கள் கரை ஒதுங்கின. நூற்றுக்கும் மேற்பட்டோரது நிலை என்னவென்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: