×

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 35வது இடத்துக்கு தள்ளப்பட்டார் கௌதம் அதானி; நிறுவன பங்குகள் இன்றும் சரிவு..!!

குஜராத்: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமான அதானி குழுமம் சமீபத்தில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தரை தட்டின. எனினும் இந்த சரிவினை மீட்டு எடுக்க அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதனிடையே, அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிய தொடங்கியுள்ளது.

அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளது. அதன்படி, அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.24 சரிந்து ரூ.462 ஆகவும், அதானி என்டர்பிரைசஸ் பங்கு ரூ.31 சரிந்து ரூ.1283 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி பவர் பங்கு ரூ.2 குறைந்து ரூ.144 ஆகவும் உள்ளன. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.35 சரிந்து ரூ.676 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.37 குறைந்து ரூ.715 ஆகவும் உள்ளன. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு ரூ.9 குறைந்து ரூ.352 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக கோடீஸ்வரர் பட்டியல்: 35 வது இடத்தில் அதானி

உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி 35வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. ஒரு மாதமாக அதானி குழும பங்குகள் தொடர் வீழ்ச்சியால் கோடீஸ்வரர் பட்டியலில் அதானி சரிவை சந்தித்து வருகிறார்.


Tags : Gautam Adhani , Adani Group, Company Shares, Decline
× RELATED விண்வெளியில் இருந்து பார்த்தாலும்...