×

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 35-வது இடத்துக்கு தள்ளப்பட்டார் தொழிலதிபர் கவுதம் அதானி

மும்பை: அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்றும் சரிவை சந்தித்து வருகின்றன. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.31 சரிந்து ரூ.1283 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.24 குறைந்து ரூ.462-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.35 குறைந்து ரூ.676-ஆகவும் டோட்டல் கேஸ் பங்கு ரூ.37 குறைந்து ரூ.715-ஆகவும் உள்ளது. மேலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் தொழிலதிபர் கவுதம் அதானி 35-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Tags : Gautam Adhani , Businessman Gautam Adhani has been pushed to the 35th place in the list of the world's billionaires
× RELATED விண்வெளியில் இருந்து பார்த்தாலும்...