×

ஆட்சியை தக்கவைக்கப்போவது யார் ?... நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது!!

ஷில்லாங்: நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.   வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிட்டுள்ளனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேகாலயாவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் இறந்ததால் மேகாலாயாவின் சோஹியோங் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகாலாந்தை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. நாகாலாந்து அகுலுடோ தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்டதால் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாகாலாந்து தேர்தலில்183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மேற்கண்ட இரு மாநிலங்களுக்கும் மொத்தமுள்ள 120 பதவிகளுக்கு 558 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.


Tags : Nagaland ,Meghalaya , Government, Nagaland, Meghalaya, Polling
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...