×

குடிபோதையில் வாகனம் ஓட்டிவிட்டு ‘பைன்’ கட்டாமல் எஸ்கேப் சென்னையில் 4,112 பேரிடம் இருந்து ரூ.4.26 கோடி வசூல்: பணம் கட்டாதவர்களின் வண்டி பறிமுதல்

சென்னை: சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல், ‘போலீசுக்கு தண்ணி’ காட்டி வந்த  4,112 நபர்களுக்கு 10 அழைப்பு மையங்கள் மூலம் தொடர்ந்து கடந்த 35 நாட்களாக போக்குவரத்து நினைவூட்டினர். இதனால், அபாரத விதிக்கப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் பயந்துபோய் ரூ.4.26 கோடி அபாராத பணத்தை செலுத்தினர். சென்னை மாநகர காவல் எல்லையில், சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

அதேநேரம் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்பு குறைவான தொகை இருந்தபோது குடிமகன்கள் போலீசில் சிக்கினால் கூட அபராத தொகையை செலுத்திவிட்டு எஸ்கேப் ஆகும் நிலை ஏற்படும். இதனால், குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கின்றனர். அபராத தொகையை சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றம், ஆன்லைன், அஞ்சல் நிலையங்களில் செலுத்தலாம் என்று கூறி போலீசார் விடுவிக்கின்றனர்.

இதை பயன்படுத்தி, வழக்கு பதிவு செய்யப்படும் நபர்கள் அபராத தொகையை தாங்கள் பிறகு கட்டிவிடுவதாக கூறி சென்று விடுகின்றனர். ஆனால், அப்படி அவர்கள் கட்டுவதில்லை.
அந்த வகையில் மாநகர காவல்துறையில், குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் 7,667 நபர்கள் உள்ளனர். அந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கும் வகையில், காவல்துறை சார்பில் 10 அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டி அபராத தொகையை மாநகர காவல்துறை தற்போது வசூலித்து வருகிறது.

அதன்படி, கடந்த 35 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாத 4,112 நபர்களுக்கு 10 அழைப்பு மையங்கள் மூலம் நினைவூட்டி சிறப்பு மையங்கள், ஆன்லைன், நீதிமன்றங்கள் மூலம் ரூ.4,26,13,000 அபராத தொகையை மாநகர காவல்துறை வசூலித்துள்ளது. 10 அழைப்பு மையங்கள் மூலம் நினைவூட்டியும் அபராத தொகையை செலுத்தாத நபர்களின் வாகனங்களை போலீசார் நீதிமன்றம்  உத்தரவுப்படி பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை மாநகர காவல்துறையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்ததால் இருந்து வந்த 347 நபர்களின் வாகனங்கள் நீதிமன்றம் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Escape Chennai , Drunk, escape without paying 'Pine', confiscation of carriage
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...