துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் கிரெஜ்சிகோவா சாம்பியன்

பிரபல டபுள்யு.டி.ஏ தொடரான துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் (21 வயது, போலந்து) மோதிய கிரெஜ்சிகோவா (27 வயது, 30வது ரேங்க்) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று நடப்பு சீசனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இப்போட்டி 1 மணி, 31 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் கிரெஜ்சிகோவா அடுத்தடுத்து டாப் 3 வீராங்கனைகளை வீழ்த்தி கோப்பையை முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது. டபுள்யு.டி.ஏ 1000 அந்தஸ்து தொடரில் அவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: