குழந்தைகள் இல்லத்தை தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை: ஓட்டேரியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தை, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்து மாணவிகளுடன் கலந்துரையாடினார். சென்னை ஓட்டேரி சச்சிதானந்தம் தெருவில் அமைந்துள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திற்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், அந்த இல்லத்தில் இருந்த மாணவிகளிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்துகண்காணிப்பாளர்களிடம் இறையன்பு விசாரணை செய்தார்.

அதன்பின்பு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். இந்த ஆய்வில் சமூக பாதுகாப்புத் துறை செயலர் சுன் சோங்கம் ஜடக் சிரு, செய்தித்துறை இயக்குனர் மோகன், சமூக பாதுகாப்புத் துறை இயக்குனர் அமர் குஷ்வாஹா, சென்னை கலெக்டர் அமிர்தஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: