இரானி கோப்பை கிரிக்கெட் இதர இந்தியாவுக்கு மயாங்க் அகர்வால் கேப்டன்

புதுடெல்லி: மத்திய பிரதேச அணியுடன் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ள இதர இந்திய அணிக்கு மயாங்க் அகர்வால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021-22 ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ம.பி. அணி, விக்கெட் கீப்பர் ஹிமான்ஷு மந்த்ரி தலைமையில் களமிறங்க உள்ளது. 2019-20 சீசன் சாம்பியனான சவுராஷ்டிரா கொரோனா பாதிப்பு காரணமாக இரானி கோப்பையில் விளையாட முடியாததால், கடந்த தொடரில் விளையாடும் வாய்ப்பு அந்த அணிக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ம.பி. விளையாடுகிறது. இந்த போட்டி குவாலியரில் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது.

இதர இந்தியா: மயாங்க் அகர்வால் (கேப்டன்), சுதிப் குமார் கராமி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஹர்விக் தேசாய், முகேஷ் குமார், அதித் சேத், சேத்தன் சகாரியா, நவ்தீப் சைனி, உபேந்திரா யாதவ் (விக்கெட் கீப்பர்), மயாங்க் மார்கண்டே, சவுரவ் குமார், ஆகாஷ் தீப், பாபா இந்திரஜித், புல்கிட் நரங், யஷ் துல்.

Related Stories: