×

கத்தார் ஓபன் டென்னிஸ் மெட்வதேவ் அசத்தல்

தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய நட்சத்திரம் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவுடன் (35 வயது, 70வது ரேங்க்) மோதிய மெட்வதேவ் (27 வயது, 8வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று  கோப்பையை முத்தமிட்டார்.

அவர் இந்த தொடரில் முதல் முறையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 46 நிமிடத்துக்கு நீடித்தது. கடந்த வாரம் ரோட்டர்டாம் தொடரிலும் பட்டம் வென்றிருந்த மெட்வதேவ், நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 2 தொடர்களில் சாம்பியனான முதல் வீரர் என்ற பெருமையையும் வசப்படுத்தினார்.


Tags : Qatar Open Tennis ,Medvedev , Qatar, Open Tennis, Medvedev is fantastic
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்