காஷ்மீரில் பண்டிட் சுட்டுக்கொலை

நகர்: ஜம்மு-காஷ்மீரில்  பண்டிட் சமூகத்தினரை குறிவைத்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.  புல்வாமா மாவட்டம், அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (40)என்பவர் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது தீவிரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சஞ்சய் சர்மாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் சர்மாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பண்டிட் சமூகத்தை சேர்ந்த சஞ்சய் சர்மா ஏடிஎம் மைய காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.   பண்டிட்களை குறிவைத்து மீண்டும் தீவிரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளதால் காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: