×

பயணிகளின் பொருட்களை பாதுகாக்க, திருட்டை தடுக்க ரயில்களில் ஸ்மார்ட் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்: இந்திய ரயில்வே அதிரடி திட்டம்

சென்னை: பயணிகளின் பொருட்களை பாதுகாக்க, ரயில்களில் டிஜிட்டல் ஸ்மார்ட் லாக்கிங் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த புதிய முயற்சியின் மூலம் ஓடும் ரயில்களில் பொருட்கள் திருடுபோவது முழுமையாக தடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் ெதரிவித்தனர். இது குறித்து இந்தியன் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களில் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்க, இந்தியன் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீண்ட தூரம் செல்லும் ரயில்களில், பார்சல் திருட்டு அதிகம் நடைபெறுகிறது. ரயில்களில் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில், ஓடிபி அடிப்படையிலான டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டத்தை, ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மொபைல் ஆப் அடிப்படையிலான டிஜிட்டல் ஸ்மார்ட் லாக்கிங் சிஸ்டம், பயணிகளின் லக்கேஜ் மற்றும் பார்சல்கள் திருடப்படுவதை தடுக்கும்.

இந்த ஸ்மார்ட் லாக்கிங் சிஸ்டம், ஜியோ மேப்பிங்கை அடிப்படையாக கொண்டது. இதனால், பொருள் உள்ள இடம் மற்றும் தகவல் சேதப்படுத்தப்பட்டால் உடனடியாக தெரிந்துவிடும். பயணிகளின் லக்கேஜ் வைக்கப்பட்டது முதல் லக்கேஜ்களை திரும்ப எடுத்துச் செல்லும் நிலையம் வரை அந்த நிலையத்தின் குறியீடு மற்றும் ஓடிபி  ஆகியவை நிர்ணயிக்கப்படும். அதே அடிப்படையில், அந்த நிலையத்தில் பொருட்களை வெளியே எடுக்க முடியும். அதற்கு ஓடிபி  வழங்கப்படும். புவி மேப்பிங் அடிப்படையிலான ஸ்மார்ட் லாக் காரணமாக, அதை எங்காவது உடைக்க முயற்சித்தாலோ அல்லது பார்சல் கோச்சில் இருந்து கட்டர் மூலம் வெட்டப்பட்டாலோ அதன் இருப்பிடம் மற்றும் தகவல் ரயில்வே அதிகாரிகளுக்கு சென்றடையும்.

இந்திய ரயில்வே தற்போது இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் லாக்கிங் முறையை சோதனை செய்து வருகிறது. மொபைல் ஆப் அடிப்படையிலான லாக்கிங் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பானது. இது டிஜிட்டல் லாக்கிங் அமைப்பாகும். இதன் மூலம் மதிப்புமிக்க பார்சல்கள் மற்றும் பொருட்கள் திருடப்படுவதைத் தடுக்க உதவும். ரயில்களில் செல்லும் சரக்குகளை திருட்டு கும்பல்கள் கண்காணிக்கின்றன. இந்த கும்பல்கள், இரவில் ஓடும் நீண்ட தூர ரயில்களை குறிவைக்கின்றன. ஆனால், ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, செயலி அடிப்படையிலான டிஜிட்டல் ஸ்மார்ட் லாக்கிங் அமைப்பு திருட்டை தடுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




Tags : Smart digital locking system in trains to protect passenger belongings, prevent theft: Indian Railways Action Plan
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்