×

கொட்டிவாக்கத்தில் அரசு டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் பொருள் கொள்ளை

துரைப்பாக்கம்: கொட்டிவாக்கத்தில் நேற்றிரவு பூட்டி கிடந்த அரசு டாக்டர் ஒருவரின் வீட்டை உடைத்து, அங்கிருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் உள்பட ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை கொட்டிவாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சரவணன் (52). இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் தற்சமயம் கட்டிட விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருவான்மியூரில் உள்ள மாமனார் வீட்டில் தனது குடும்பத்துடன் டாக்டர் சரவணன் தங்கி வந்திருக்கிறார். இந்நிலையில், கொட்டிவாக்கத்தில் உள்ள டாக்டர் சரவணனின் வீட்டை நேற்றிரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டு பீரோவை உடைத்து, அதில் இருந்த நகைகள், வெள்ளி பாத்திரங்கள், டிவி, லேப்டாப் உள்பட ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் விரிவாக்கப் பணிகளை பார்வையிட டாக்டர் சரவணன் வந்திருந்தார். அப்போது அவரது வீட்டை உடைத்து, ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இப்புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Kotivakam , 5 lakh worth of goods stolen from the government doctor's house in Kotivakam
× RELATED பெண் தற்கொலை விவகாரத்தில் கடத்தப்பட்டவர் மீட்பு