×

ஷர்துல் தாகூருக்கு நாளை திருமணம்

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர். கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 8 டெஸ்ட் , 34 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 31 வயதாகும் ஷர்துல் தாகூர் மும்பையைச் சேர்ந்த “ஆல் தி பேக்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மித்தாலி பருல்கர் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், நாளை மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் நண்பர்கள், உறவினர்கள் என 250 பேர் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி நேற்று நடந்த திருமண சடங்கு நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு தாகூர் உற்சாக நடனமாடினார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Tags : Shardul Tagore , Shardul Tagore is getting married tomorrow
× RELATED ஷர்துல் தாகூர் அதிரடி சதம்; முன்னிலை...