புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை திடீர் ரத்து

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வருகிற 28ம்தேதி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை செய்வதில் புதுவை அரசு தீவிரம் காட்டியது.

இதுதொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: