×

திருப்பூர் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் சரோஜா, க/பெ. நாச்சிமுத்து (வயது50), பூங்கொடி, க/பெ. கோவிந்தராஜன் (வயது48), கிட்டுசாமி, த/பெ.நாச்சி (வயது45) மற்றும் செல்வி. தமிழரசி, த/பெ.குணசேகரன் (வயது 17) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி, த/பெ.குமரன் (வயது 50), வளர்மதி, க/பெ.சுதாகரன் (வயது 26), இந்துமதி, க/பெ.குணசேகரன் (வயது 23) மற்றும் காயத்ரி, த/பெ.சரவணன் (வயது 12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும்,  படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Tags : Tirupur ,Chief Minister ,M.K.Stal , Condolences and financial assistance to the family of the deceased in the road accident in Tirupur District: Chief Minister M.K.Stal's announcement
× RELATED திருப்பூரில் ரோட்டோரத்தில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்