டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை புதுடெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். வரும் செவ்வாய் மதியம் அவர் சென்னை திரும்புகிறார்.

சென்னை விமானநிலையத்தில் இன்று காலை 7.15 மணியளவில் புதுடெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தயார்நிலையில் இருந்தது. இவ்விமானத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றதாக கூறப்படுகிறது.

புதுடெல்லியில் இருந்து வரும் 28ம் தேதி மதியம் ஏர் இந்தியா விமானத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார். இப்பயணத்தில் அரசியல் மற்றும் அரசு முறைப்படி ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட யாரையும் சந்திக்கவில்லை. இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட சொந்த பயணம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: