இனி ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிச்சயம் அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும்: புகைப்படங்களை பகிர்ந்து அதிமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கருத்து

சென்னை: இனி இவரால் நிச்சயம் அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும் என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சந்தித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி பரபரப்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, இனி இவரால் நிச்சயம் அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து, அதிமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி பரபரப்பாக கருத்து கூறியுள்ளார்.

பாஜகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தையும் தொடர்ந்து தாக்கிப் பேசி வரும் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, ஆளுநர் ரவியை சந்தித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேசி பழனிசாமி, ஓபிஎஸ், இபிஎஸ் பாஜகவிற்கு அடிபணிந்து செயல்படுவதாகவும் விமர்சித்து வருகிறார். இந்த சமயத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சந்தித்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

Related Stories: