×

அனகாபுத்தூரில் ரூ.1.27 கோடியில் அங்கன்வாடி கட்டிட பணிகள் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

தாம்பரம்: அனகாபுத்தூரில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி பணிகளை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு புதிதாக தாம்பரம் மாநகராட்சி தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி அழகுமீனா ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் அதிரடி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து பணிகளும் உடனுக்குடன் நடந்து வருகிறது.


இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலத்துக்கு உட்பட்ட அனகாபுத்தூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.1.27 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தினசரி அங்காடி கட்டிடத்தை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் எந்த அளவு முடிந்து இருக்கிறது, இன்னும் என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளது, பணிகள் முழுவதும் முடிவடையும் நாள் எது, எவ்வளவு பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து அங்காடி கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Tags : Ananganwadi Building Works ,Anakaptur , Anganwadi construction work, Municipal Commissioner inspection, order to complete quickly
× RELATED அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையில்...