தியாகராஜ சுவாமி கோயிலில் பிரமோற்சவ விழா : இன்று கொடியேற்றம்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று  இரவு 7 மணிக்கு பிரமோற்சவ விழா விநாயகர் உற்சவத்துடன் தொடங்குகிறது. பின்னர் இரவு 8.30 மணி முதல் 9.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு சந்திரசேகர சுவாமி புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக மார்ச் 4ம் தேதி (சனிக்கிழமை)  காலை 8 மணி முதல் 10.45 மணிக்குள் சந்திரசேகரர் சுவாமி திருத்தேர் வீதியுலா நடக்கிறது.

அப்போது 47 அடி உயர மரத் தேரில் சந்திரசேகரசுவாமி, திரிபுர சுந்தரி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறது. தொடர்ந்து மார்ச் 6ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக்கல்யாண உற்சவமும், பிற்பகல் 2 மணிக்கு 63  நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும், தொடர்ந்து இரவு 9 மணிக்கு மகிழடி சேவை உற்சவமும் நடக்கிறது. அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Stories: