×

கொளத்தூரில் தேர்வு பயத்தால் வீட்டைவிட்டு ஓடிய 10ம் வகுப்பு மாணவன்: காட்பாடியில் மீட்பு

பெரம்பூர்:  கொளத்தூர் செந்தில்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ரவிஜோஷி (47). இவரது 10ம் வகுப்பு படிக்கும் மகன் திடீரென மாயமானான்.இதனால் அவனது தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அக்கம் பக்கம் முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கணவரிடம் மகனை காணவில்லை என்று கூறினார். இதுகுறித்து, ரவிஜோஷி, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையில் தேர்வு பயத்தின் காரணமாக நண்பருடன் சேர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றது தெரிய வந்தது. அங்கிருந்து ரவி ஜோஷியின் மகன் மட்டும் ரயிலில் ஏறி காட்பாடிக்கு சென்றுள்ளான். காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சிக்கிய சிறுவன், தான் கொளத்தூரைச் சேர்ந்தவன் எனக் கூறியுள்ளான்.  உடனே ரயில்வே போலீசார் ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில ராஜமங்கலம் போலீசார் காட்பாடிக்குச் சென்று, சிறுவனை மீட்டுக் கொண்டு வந்து ரவி ஜோஷியிடம் ஒப்படைத்தனர்.  சிறுவனுக்கு போலீசார் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினர்.

Tags : Kolathur , Exam fear, student who ran away from home, rescue in the wild
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...