×

மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் குறை தீர்க்கும் முகாம்

திருவொற்றியூர்: ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டத்தில் செங்குன்றம், மணலி மற்றும் எண்ணூர் சரகத்துக்குட்பட்ட 10 காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து நிலம், கொடுக்கல் வாங்கல், குடும்ப பிரச்னை, காதல் விவகாரம் போன்ற பல்வேறு புகார் குறித்த மனுக்கள் 500க்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன.
இந்த புகார்களுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் வகையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில்,  பொதுமக்கள் மனு குறை தீர்ப்பு முகாம் மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய வளாகத்தில் நடந்தது.

செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி, பிரம்மானந்தம், முருகேசன் முன்னிலை வகித்தனர். ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, 350க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டனர். முகாமில், ஆய்வாளர்கள் சங்கர், செங்குட்டுவன், சுந்தர் உள்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madhavaram Dairy Police Station , Madhavaram Dairy, Police Station, Grievance Redressal Camp
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...