இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனாவின் கடனுதவி அமெரிக்கா கவலை

வாஷிங்டன்: பொருளாதார, நிதி நெருக்கடியினால் சிக்கி தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்துக்கு கடன் உதவி அளிப்பதன் மூலம் அவற்றை தனக்கு சாதகமான நேரத்தில் பயன்படுத்தி கொள்ள சீனா நினைப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வரும் 1ம் தேதி 3 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

இவரது வருகையையொட்டி, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு இணை அமைச்சர் டொனால்டு லூ அளித்த பேட்டியில், ``பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு சீனா கடனுதவி அளிப்பது கவலையளிப்பதாக இந்தியாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இது குறித்து அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது,’’ என்றார்.

Related Stories: