×

வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து திணறல்: ஆண்டர்சன் அபார பந்துவீச்சு

வெலிங்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து திணறி வருகிறது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்  இழப்புக்கு 315 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து, நேற்று 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 186 ரன் (176 பந்து, 24 பவுண்டரி, 5 சிக்சர்), ஜோ ரூட் 153* ரன் (224 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.  

நியூசி. தரப்பில்  மேட் ஹென்றி 4, பிரேஸ்வெல் 2,  கேப்டன் சவுத்தீ, வேக்னர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி கான்வே (0), வில்லியம்சன் (4), வில் யங் (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, 8.3 ஓவரில் 21 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. ஓரளவு தாக்குப்பிடித்த டாம் லாதம் - ஹென்றி நிகோல்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தது. லாதம் 35 ரன்,  நிகோல்ஸ் 30 ரன், டேரில் மிட்செல் 13 ரன் எடுத்து ஜாக் லீச் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பிரேஸ்வெல் 6 ரன் எடுத்து பிராடு வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மழை காரணமாக 2வது நாள் ஆட்டமும் பாதிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து திணறி வருகிறது (42 ஓவர்). டாம்  பிளண்டெல் 25 ரன், டிம் சவுத்தீ 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில்  ஆண்டர்சன், லீச் தலா 3 விக்கெட், பிராடு 1 விக்கெட் எடுத்தனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags : New Zealand ,Wellington ,Anderson , Wellington Test, New Zealand stutter, Anderson bowls brilliantly
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா