காஷ்மீரில் சொத்து வரி வசூலிப்பது கண்டித்து போராட்டம்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் சொத்து வரி விதிப்பதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சொத்து வரி செலுத்துவது அமல்படுத்தப்படுகின்றது. யூனியன் பிரதேசத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யூனியன் பிரதேசத்தின் முடிவை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. ஷெர் இ காஷ்மீர் பூங்கா அருகே உள்ள  கட்சியின் தலைமை அலுவலகம்  முன்பு தலைமை செய்தி தொடர்பாளர் சுகைல் புகாரி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: