×

அவுரங்காபாத் பெயர் மாற்றம்: அரசு அனுமதி

மும்பை:  மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரை சத்ரபதி சம்பாஜிநகர் என்றும், ஒஸ்மானாபாத் நகரின் பெயரை தாராஷிவ் என்றும் மாற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவுரங்காபாத் என்ற பெயர் முகாலாய பேரரசர் அவரங்கசீப்பை குறிக்கின்றது. இதேபோல் உஸ்மனாபாத் என ஐதராபாத் சமஸ்தானத்தின் 20ம் நூற்றாண்டின் ஆட்சியாளரின் பெயர் வைக்கப்பட்டது.

மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி, அவரது தந்தையால் நிறுவப்பட்ட மராட்டிய மாநிலத்தின் இரண்டாவது ஆட்சியாளர். 1969ம் ஆண்டு அவுரங்கசீப் உத்தரவின்பேரில் இவர் தூக்கிலிடப்பட்டார். தற்போது அவுரங்காபாத் என்ற பெயர் சத்ரபதி சம்பாஜிநகர் என பெயர் மாற்றப்படுகின்றது. இதேபோல் ஒஸ்மானாபாத் அருகே உள்ள குகை வளாகத்தின் பெயர் தாராஷிவ். இந்த குகை 8வது நூற்றாண்டை சேர்ந்ததாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே ஒஸ்மானாபாத்துக்கு தாராஷிவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Aurangabad , Aurangabad, name change, Govt
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்