×

வெளிநாட்டில் நடைபெறும் பயிற்சியில் தேஜஸ் விமானங்கள் முதல் முறை பங்கேற்பு

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை முதல் மார்ச் 17ம் தேதி வரை பல்வேறு வகையான விமானங்களின் வான் பயிற்சி நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ், குவைத், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பஹ்ரைன், மொராக்கோ, ஸ்பெயின், கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்கின்றன. இந்த பயிற்சியில் முதல் முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இதற்காக 110 விமானப்படை வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளனர்.

5 தேஜஸ் விமானங்கள் மற்றும் இரண்டு சி-17 குளோப்மாஸ்டர்-3 விமானங்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளன. தேஜஸ் விமானங்கள் முதல்முறையாக வெளிநாட்டில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையால் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tejas , Training held abroad, participation of Tejas flights
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...