சென்னை: அறநிலையத்துறையின், மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி அத்துறையின் ஆணையருக்கு, செயலாளர் சந்தர மோகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு: மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாத சுவாமி கோயிலுக்கு தரைதளம் அமைத்தல், அம்மன் பிரகாரம், ராஜகோபுரம் 2ம் பிரகாரம் முதல் அம்மன் சன்னதி வரை ரூ.2.10 கோடி கோயில் நிதி மூலம் பணியினை மேற்கொள்ளலாம். அதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள சப்தரிஸ்ஈஸ்ஷீஸ்வர சுவாமி கோயிலின் சன்னதி, மகா மண்டபம், நந்தி சன்னதி பழுது பார்த்து புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.1.35 கோடி பொதுநல நிதி மூலம் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விளானூர் பாம்பணி அம்மன் கோயிலில் ரூ.1.80 கோடியில் திருப்பணிகளை மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
