மகளிர் டி.20 உலக கோப்பை; ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா பைனலில் நாளை பலப்பரீட்சை

கேப்டவுன்: 10 அணிகள் பங்கேற்ற 8வது ஐசிசி மகளிர் டி.20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்துவருகிறது. இதில் முதல் அரையிறுதியில் இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்திய நிலையில் 2வது அரையிறுதிபோட்டி நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து-தென்ஆப்ரிக்கா மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 53, டாஸ்மின் பிரிட்ஸ் 68, மரிசான் கேப் நாட்அவுட்டாக 27 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய 34 வயதான சப்னம் இஸ்மாயில் 7 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் 6 ரன் வித்தியாசத்தில், வெற்றிபெற்ற தென்ஆப்ரிக்கா முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. டாஸ்மின் பிரிட்ஸ் ஆட்டநாயகி விருதுபெற்றார்.

இந்த போட்டியில் தென்ஆப்ரிக்காவின், சப்னம் இஸ்மாயில் 128 கி.மீ. வேகத்தில் பந்துவீசி, மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்துவீசிய வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார். நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் தென்ஆப்ரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆஸி. 6வது முறையாகவும், தென்ஆப்ரிக்கா முதன்முறையாகவும் பட்டம் வெல்ல மல்லுக்கட்ட உள்ளன.

Related Stories: