×

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மறைவெய்தியதையடுத்து. தமிழ்நாடு முதலமைச்சர் .க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.

இதற்கிடையே முதலமைச்சர் சார்பில், முன்னாள் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தினார்.

Tags : Palaniyammal ,Pannerselvam ,Stalin , Chief Minister M. K. Stalin condoles death of O. Panneerselvam's mother Palaniammal
× RELATED பல ஆக்கப்பூர்வமான திட்டங்களைக் குறு,...