×

திருமண விழா ஒன்றில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாக். நடிகை

மும்பை: பாகிஸ்தானில் திருமண விழா ஒன்றில் நாட்டு நாட்டு பாடலுக்கு சூப்பராக ஆட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகையின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவில் வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல், இந்தாண்டின் கோல்டன் குளோப் மற்றும் கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளை பெற்றது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி, நமது அண்டை நாடான பாகிஸ்தானிலும் இந்த பாடலின் மெட்டுகளுக்கு மக்கள் ஆட்டம் போடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

 அதன்படி பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் என்பவர் பங்கேற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி உள்ளது. அவருடன் மற்றொரு நடிகர் சபூர் அலி என்பவரும் சேர்ந்து ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலின் எனர்ஜியான ஹூக் ஸ்டெப்ஸுக்கு ஏற்ப வெள்ளை நிற ஸ்னீக்கர்ஸ் அணிந்திருந்த ஹனியா, அற்புதமாக ஆடியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் திகைத்து போயுள்ளனர். பல லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

Tags : Bach , Bach gave a superb performance to the song 'Nattu Natu' at a wedding ceremony. actress
× RELATED பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ்...